குடிநீர் பிடிப்பதில் தகராறு
சிவகாசி: சிவகாசி ஆலமரத்துப்பட்டி ரோடு எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் முனியம்மாள் 51. இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் அண்ணாதுரை மனைவி முருகேஸ்வரிக்கும் பொதுக் குழாயில் குடிநீர் குடிப்பது சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் தகாத வார்த்தை பேசி அடித்து கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்திக்குத்து
சிவகாசி: சிவகாசி இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் செல்வராஜ் 58. இவரது மகன் குமார் 34. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதே மருத்துவமனையில் ஈஞ்சார் விலக்கு பகுதியைச் சேர்ந்த கதிரேச பாண்டியன் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக பணிபுரிகிறார். இந்நிலையில் கதிரேச பாண்டியன் தகாத வார்த்தை பேசி குமாரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு பஸ் டிரைவர் தற்கொலை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன், 45, இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார் இவருக்கு மனைவி ஸ்ரீதேவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று அதிகாலை முருகனின் அறைக்குச் சென்று பார்த்த போது அவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

