மாணவி தற்கொலை
விருதுநகர்: விருதுநகர் மணி நகரத்தை சேர்ந்த ஆரியபட்டர் மகள் கிருத்திகா ராணி 21. பி.ஏ. இரண்டாமாண்டு படித்தார். பகுதி நேரமாக தெரிந்தவர்களுக்கு மெகந்தி போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். மார்ச் 1ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறி விட்டு அருப்புக்கோட்டையில் மெகந்தி போட சென்றுள்ளார். இது அறிந்த தாய் ரோகினி மகளை திட்டினார். மறுநாள் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
இளைஞர் தற்கொலை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டைஅருகே பெரிய கட்டங்குடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 42, இவருடைய மகன் பிரவீன், 19, இவர் தனியார் பஸ் சர்வீஸ் நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தன் உறவினர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவருக்கு அரிவாள் வெட்டு
நரிக்குடி: நரிக்குடி சின்னமுள்ளிக்குடியை சேர்ந்த பூமிநாதன் 36 , இவரது மனைவி வேணி 32. 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கோர்ட் மூலம் தீர்வு காண அறிவுறுத்தி அனுப்பினர். இப்பிரச்னைக்கு காரணம் பூமிநாதனின் பெரியப்பா வெள்ளைச்சாமி 80, தான் என நினைத்த வேணியின் தந்தை கணேசன் 60. நேற்று அரிவாளால் வெட்டினார். காயமடைந்த அவர்அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.