நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
சங்கத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வீரபாண்டியராஜ் வரவேற்றார். ரோட்டரி நிர்வாகி முத்துராமலிங்க குமார் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசினார். மதுவிலக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆனந்தி போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.
விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் நந்தகோபால், சக்திவேல் ராஜா, மகேந்திரன், அலெக்ஸ் பங்கேற்றனர். செயலாளர் சின்னத்தம்பி நன்றி கூறினார்.