/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குவாரி முதலீடு; ரூ.16.76 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு
/
குவாரி முதலீடு; ரூ.16.76 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு
குவாரி முதலீடு; ரூ.16.76 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு
குவாரி முதலீடு; ரூ.16.76 லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 25, 2024 03:52 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி 34. இவரிடம்குவாரி தொழிலில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 16.76 லட்சம் மோசடி செய்த பர்மா காலனியைச் சேர்ந்த நவீன், பாண்டி மீனா, ரேவதி, செல்லபாண்டி, விஜய் அமிர்தராஜ், எட்வின் செல்வகுமார் ஆகியோர் மீது மேற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவரின் உறவினர் மூலம் பர்மா காலனியைச் சேர்ந்த நவீன் அறிமுகமானார்.
இவர் குவாரி தொழில் செய்து வருவதாகவும், தனது தொழிலை விரிவுபடுத்த உள்ளதால், முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற ஆசை வார்த்தைகளை ஜெயந்தியிடம் கூறியுள்ளார்.
இதை நம்பி 2022 பிப்.17ல் நவீன் வங்கி கணக்கிற்கு ரூ.9 லட்சம் செலுத்தினார்.
மேலும் நவீன் நண்பர்களான பாண்டி மீனா, ரேவதி, செல்லபாண்டி, விஜய் அமிர்தராஜ், எட்வின் செல்வகுமார் ஆகியோரின் வங்கி கணக்கிற்கு 2022 பிப். 27 வரை மொத்தம் ரூ. 16 லட்சத்து 76 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் 2024 மார்ச் 27ல் குவாரி லைசென்ஸ் எடுக்க கூடுதலாக ரூ. 10 லட்சம் வேண்டும் என நவீன் கேட்டதால் சந்தேகம் அடைந்த ஜெயந்தி குவாரி எங்கு உள்ளது என தெரிய வேண்டும் என்றார். மேலும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக நவீன் மிரட்டினார்.
மேற்கு போலீசார் நவீன், பாண்டி மீனா, ரேவதி, செல்லபாண்டி, விஜய் அமிர்தராஜ், எட்வின்செல்வகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.

