/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் கடைகளில் ஊட்டி டீ துாளை விற்க கட்டாயப்படுத்த கூடாது
/
ரேஷன் கடைகளில் ஊட்டி டீ துாளை விற்க கட்டாயப்படுத்த கூடாது
ரேஷன் கடைகளில் ஊட்டி டீ துாளை விற்க கட்டாயப்படுத்த கூடாது
ரேஷன் கடைகளில் ஊட்டி டீ துாளை விற்க கட்டாயப்படுத்த கூடாது
ADDED : ஆக 13, 2024 12:22 AM
திருச்சுழி : ரேஷன் கடைகளில் ஊட்டி டீ தூளை விற்க பணியாளர்களை கட்டாயப்படுத்த கூடாது என, தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
திருச்சுழியில் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்திவடிவேல் தலைமை வகித்தார். செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். மாநில பிரதிநிதி ராமசாமி வரவேற்றார். ராஜபாளையம் அமைப்பு செயலாளர் மாரிமுத்து பொருளாளர் செல்லப்பாண்டியன் பேசினர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து வரும் ரேஷன் பொருட்களை எடை குறைவின்றி வழங்கவும், அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி செய்யவும், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அனைத்து பொருட்களும் 100 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யவும் வேண்டும், ரேஷன் கடைகளில் ஊட்டி டீ தூளை கட்டாயப்படுத்தி விற்க சொல்வதை கைவிட வேண்டும், அரிசி உட்பட அனைத்து பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - -

