/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
/
பட்டாசு ஆலை உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
ADDED : மே 15, 2024 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் அசோக். இவருக்கு அதே பகுதியில் ஸ்ரீ பிரியா பட்டாசு ஆலை உள்ளது.
இங்கு தாசில்தார் வடிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பட்டாசு ஆலை வளாகத்தில் தகர செட் அமைத்து அனுமதி இன்றி சரவெடி தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.
பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தனர்.

