ADDED : மே 06, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் இயக்கிய குறும்படங்கள் வெளியிட்டு விழா நடந்தது.
துணைவேந்தர் நாராயணன் தலைமை வகித்தார். பதிவாளர் வாசுதேவன், டீன் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். வேந்தர் ஸ்ரீதரன் குறும்படங்களை வெளியிட்டு பேசினார். திரைப்பட இயக்குனர் கஜேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் இயக்கிய படங்கள் திரையிடப்படுவதை துவக்கி வைத்து பேசினார். ஏற்பாடுகளை துறை தலைவர் கற்பகசுந்தரம், பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.