/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்டுவட பாதிப்புக்கு காரணமான 125 வேகத்தடைகள் அகற்றம்
/
தண்டுவட பாதிப்புக்கு காரணமான 125 வேகத்தடைகள் அகற்றம்
தண்டுவட பாதிப்புக்கு காரணமான 125 வேகத்தடைகள் அகற்றம்
தண்டுவட பாதிப்புக்கு காரணமான 125 வேகத்தடைகள் அகற்றம்
ADDED : ஆக 14, 2024 12:33 AM
விருதுநகர், : விருதுநகரில் முறையற்ற வேகத்தடைகளால் வாகன ஒட்டிகளுக்கு தண்டுவட பாதிப்பு அபாயம் ஏற்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி, நகராட்சி, ஊரக பகுதிகளில் உள்ள ரோடுகளில் மக்கள் சிலர் தன்னிச்சையாக சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி வேகத்தடைகளை அமைத்துள்ளனர். வேகத்தடைகள் உரிய அளவீட்டின்படி அமைக்காததால் விபத்து ஏற்பட்டு, உயிர்சேதம், படுகாயம் ஏற்படுகிறது.
முறையற்ற வேகத்தடைகளை கடக்கும் வாகன ஒட்டிகளுக்கு முதுகுதண்டுவடம், இடுப்பு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என மக்கள் புகார்கள் செய்து வந்த நிலையில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 255 வேகத்தடைகளில் 46 இடங்களில் வேகத்தடைகள் போக்குவரத்திற்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதே போல் ஊரக பகுதிகளில் உள்ள 672 வேகத்தடைகளில், உரிய அளவீட்டின்படி இல்லாத வேகத்தடைகளை கண்டறிய ஊராட்சிகள் உதவி இயக்குனர் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் 125 வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன என கோட்ட பொறியாளர் பாக்கியலெட்சுமி தெரிவித்தார்.
ஊராட்சி நிர்வாகங்கள் சார்பிலும் வேகத்தடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.