/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புள்ளி விபரங்கள் தரும் துறையாக மாறிவரும் பள்ளி கல்வித்துறை
/
புள்ளி விபரங்கள் தரும் துறையாக மாறிவரும் பள்ளி கல்வித்துறை
புள்ளி விபரங்கள் தரும் துறையாக மாறிவரும் பள்ளி கல்வித்துறை
புள்ளி விபரங்கள் தரும் துறையாக மாறிவரும் பள்ளி கல்வித்துறை
ADDED : ஆக 30, 2024 05:40 AM
அருப்புக்கோட்டை : பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் எமிஸ் என்ற செயலியால் ஆசிரியர்களின் முழு கவனமும் அதில் திருப்பப்பட்டு அரசுக்கு புள்ளி விவரங்கள் தரும் துறையாக கல்வித்துறை மாறி வருகிறது, என ஆசிரியர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பள்ளி கல்வி துறை மூலம் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. சீருடை, காலணி, சைக்கிள், புத்தகங்கள், எழுது பொருட்கள், பை உட்பட பல பொருட்கள் இலவசமாக வழங்கி வருகிறது.
அத்துடன் இல்லாமல் மாணவர்கள் பற்றிய முழு தகவல்களை அறிய எமிஸ் என்ற கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற செயலியை ஆன்லைன் மூலம் பராமரித்து வருகிறது. இதை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒவ்வொரு மாணவரின் பெயர், பிறந்த தேதி, வகுப்பு சான்றிதழ்கள், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பெற்றோர்களின் தொலைபேசி உட்பட விபரங்கள் இருக்கும். இவற்றை அவ்வப்போது எமிஸ் செயலியில் அப்டேட் செய்ய வேண்டும். பள்ளி கல்வித்துறை மூலம் அவ்வப்போது கேட்கப்படும் விபரங்களை உடனுக்குடன் ஆசிரியர்கள் எமிஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு இதனால் கூடுதலான பணிச்சுமை ஏற்படுகிறது.
வகுப்பறைக்குச் சென்று பாடம் நடத்துவதிலும், கல்விசார் செயல்பாடுகளிலும் சிக்கல் ஏற்படுகிறது. தினமும் ஏதாவது ஒரு தகவல்களை பள்ளி கல்வி துறை கேட்டு கொண்டே உள்ளனர்.
ஒரு தகவலை பதிவேற்றம் செய்து முடிக்கும் போது, மற்றொரு தகவலுக்கான செய்தி வாட்ஸ் அப்பில் வந்து விடுகிறது. இதனால், ஆசிரியர்கள் எந்த நேரமும் அலைபேசியை கையில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கான இடைவெளியை அதிமாக்கி விடுகிறது.
மாணவர்களுடன் சிறிது நேரமாவது ஆசிரியர்கள் ஒரு மனதோடு வகுப்பறையில் பாடம் சொல்லி தர முடியவில்லை. புள்ளி விபரங்களுக்கு மட்டும் முக்கியதுவம் தருகிறது கல்வி துறை. இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது, என ஆசிரியர்கள் வேதனையடைகின்றனர்.
எமிஸ்சால் அல்லல்படும் ஆசிரியர்கள்
குணசேகரன், மாநில தலைவர், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி:
எமிஸ் செயலி மூலம் கல்வி துறை கேட்கும் பதிவேற்றங்களை செய்ய முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர். எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் உடன் எமிஸில் ஏற்றச் சொல்வதால் ஆசிரியர்களுக்கு வேலை பனிச் சுமை அதிகமாக உள்ளது மன அழுத்தம் கூடுகிறது. கடந்த ஆண்டு 6 முதல் பிளஸ் 2 வரை, கலை திருவிழா நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
தற்போது 1 முதல் 5 வகுப்பு வரை கலை திருவிழாவை நடத்தி அதையும் எமிசில் ஏற்ற சொல்கின்றனர். தற்போது அரசு இலவசமாக வழங்கும் புத்தகங்கள், சீருடைகள் உட்பட பொருட்களை ஒவ்வொரு மாணவனுக்கும் வழங்கி அதையும் எமிசில் ஏற்ற சொல்வதால் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் இல்லாமல் போகிறது. மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி எமிசில் ஏற்றும் பதிவு ஏற்றங்களை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.