ADDED : பிப் 27, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் மகாத்மா வித்யாலயா பள்ளியில் 21வது விளையாட்டு விழா நடந்தது.
தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். ஆசிரியை நர்மதா ஆண்டறிக்கை வாசித்தார்.
மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு நண்பர்கள் ரோட்டரி சங்க தலைவர் பால்சாமி, செயலாளர் சமுத்திரவேல் பரிசு வழங்கி பேசினர். ஆசிரியர்கள் ஜோஸ்பிரியா, தாரணி விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.

