/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செப். 13ல் சிறப்பு கல்வி கடன் முகாம்
/
செப். 13ல் சிறப்பு கல்வி கடன் முகாம்
ADDED : செப் 11, 2024 12:23 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில்சிறப்பு கல்வி கடன் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து செப். 13ல் நடக்க உள்ளது.
கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், கல்வி கடன் விண்ணப்ப நகல், மாணவர்களின் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட போனபைடு சான்று, கல்விக்கட்டண விவரம், மதிப்பெண் சான்றுகள் உடன் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லுாரி சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம்.
15 நாட்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.