/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2386 வழக்குகளுக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2386 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2386 வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2386 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 10, 2024 05:46 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13.87 கோடிக்கு உத்தரவிடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட அனந்தீஸ்வரி குடும்பத்திற்கு ரூ.24 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடு தொகையாக சமரச முறையில் பேசி முடிக்கப்பட்டு, அதற்கான தீர்வு நகலை உடனடியாக நீதிபதி ஜெயக்குமார் வழங்கினார்.
மேலும் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வார கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உட்பட 6 ஆயிரத்து 435 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அதில் 2 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 13 கோடி 87 லட்சத்து 99 ஆயிரத்து 624க்கு உத்தரவிடப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழுக்கள் சார்பில் அந்தந்த நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.