/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதாள சாக்கடை மேன்ஹோலில் வெளியேறும் கழிவு நீர்--: மக்கள் அவதி
/
பாதாள சாக்கடை மேன்ஹோலில் வெளியேறும் கழிவு நீர்--: மக்கள் அவதி
பாதாள சாக்கடை மேன்ஹோலில் வெளியேறும் கழிவு நீர்--: மக்கள் அவதி
பாதாள சாக்கடை மேன்ஹோலில் வெளியேறும் கழிவு நீர்--: மக்கள் அவதி
ADDED : ஜூலை 17, 2024 12:06 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் மலையடிப்பட்டி ரயில்வே கேட் அருகே பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் துர்நாற்றம் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைக்குள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி ரயில்வே கேட் அருகே மெயின் ரோட்டை ஒட்டி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மலையை ஒட்டிய மேடான குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் ரயில்வே கேட் அருகே ரோட்டின் நடுவே உள்ள பாதாளசாக்கடை மேன்ஹோல் வழியாகவும் அதனை அடுத்து உள்ள குடியிருப்புக்கான பாதாள சாக்கடை கழிவு தொட்டி வழியாக சாக்கடையிலும் வெளியேறி வருகிறது.
தேங்கியிருக்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. சுமதி கூறுகையில், தொடக்கத்திலிருந்தே ரோட்டில் அமைந்துள்ள மேன்ஹோலில் கழிவு நீர் வழிந்து மேடு பள்ளமாக சேதம் ஆகிவிட்டது. வீட்டின் அருகே பாதாள சாக்கடைக்கான தொட்டி மூடி வழியே கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. சுகாதார பணியாளர்களிடம் புகார் தெரிவித்தால் வீட்டின் அருகே உள்ள ஒரு தொட்டியை சிமெண்ட் வைத்து அடைக்க சொல்லிவிட்டனர்.
அருகில் உள்ள தொட்டி மூடி வழியே தொடர்ந்து வெளியேறுகிறது. சிறிய மழை வந்தால் இதன் வேகம் கூடி மூச்சுத் திணறல் ஏற்படுவதுடன், கழிவு நீரால் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை கழிவு நீர் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.