/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அதிகாலை குப்பை எரிப்பால் புகை மூட்டம் நடைபயிற்சியாளர் நோயாளியாகும் நிலை
/
அதிகாலை குப்பை எரிப்பால் புகை மூட்டம் நடைபயிற்சியாளர் நோயாளியாகும் நிலை
அதிகாலை குப்பை எரிப்பால் புகை மூட்டம் நடைபயிற்சியாளர் நோயாளியாகும் நிலை
அதிகாலை குப்பை எரிப்பால் புகை மூட்டம் நடைபயிற்சியாளர் நோயாளியாகும் நிலை
ADDED : ஜூலை 31, 2024 04:37 AM

விருதுநகர் : விருதுநகர் அதனை சுற்றிய அல்லம்பட்டி, கூரைக்குண்டு பகுதிகளில் அதிகாலையில் குப்பையை எரிக்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம் விளையாட்டு அரங்கத்தை சூழ்ந்து நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் நோயாளிகளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும், கலெக்டர் வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்ட ரோட்டிற்கு நடை, உடற்பயிற்சிக்காக அதிகாலையில் சிறுவர்கள் முதல் வயதானோர்கள் வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் விளையாட்டு அரங்கத்தை சுற்றிய அல்லம்பட்டி, கூரைக்குண்டு பகுதிகளில் சேகரித்த குப்பை, ரோட்டின் ஓரங்களில் கிடக்கும் குப்பையை சிலர் அதிகாலையில் எரிக்கின்றனர். இதிலிருந்து வரும் புகை பனிமூட்டம் போல விளையாட்டு அரங்கம், கலெக்டர் வளாகத்தை சுற்றி சூழ்ந்து விடுகின்றது.
இதனால் அதிகாலை நடை, உடற்பயிற்சிகளுக்காக வருபவர்கள் சுவாசப்பிரச்னைக்கு ஆளாகி நோயாளிகளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்தால் உடலுக்கும், மனதிற்கும் நன்மை தரும் என்ற நிலை மாறி சுவாசக்கோளாறு, ஆஸ்துமா ஏற்படுகிறது. இது போன்ற குப்பை எரிக்கும் செயல்களில் சமூக விரோதிகள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.
எனவே நான்கு வழிச்சாலை, கவுசிகா நதி கரைகளில் கொட்டப்படும் குப்பையை எரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

