/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு பள்ளிக்குள் புகுந்த பாம்பு
/
அரசு பள்ளிக்குள் புகுந்த பாம்பு
ADDED : மார் 05, 2025 06:00 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால், மாணவிகள் பீதியடைந்ததை அடுத்து தீ யணைப்பு துறையினர் பாம்பை பிடித்தனர்.
திருச்சுழி அருகே உடையனம்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளியில் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி காட்டு பகுதியில் இருப்பதால் விஷ ஐந்துக்கள் பள்ளிக்குள் அடிக்கடி வருவது வழக்கம். நேற்று பள்ளியின் கழிப்பறையில் 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பு புகுந்தது. இதை பார்த்த மாணவிகள் அலறினர்.
திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் குழுவினர் பள்ளிக்குச் சென்று பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். பதற்றம் தணிந்து மாணவிகள் வகுப்பறைக்குச் சென்றனர்.
அரசு பள்ளி சுற்று பகுதியில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்பது பெற்றோர் கோரிக்கையாக உள்ளது.