/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகள் போர்வையில் மண் கொள்ளை
/
விவசாயிகள் போர்வையில் மண் கொள்ளை
ADDED : ஜூலை 19, 2024 06:20 AM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் விவசாயத்திற்கான வண்டல் மண் அனுமதியை தொடர்ந்து விவசாயிகள் போர்வையில் செங்கல்சூளைக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் அரசியல்வாதிகள் ஆசியுடன் மண் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் பருவ மழைக்கு முன் விவசாய தேவைகளுக்காக அனுமதி பெற்று வண்டல் மண் இலவசமாக விவசாயிகள் அள்ளுவதற்கு அறிவிப்பு வந்தது. இதையடுத்து ராஜபாளையம் கோவிலுார் அருகே வாண்டையார் குளத்தில் 3 கனரக மண் அள்ளும் இயந்திரம் மண் லாரிகளுடன் விவசாயிகள் பெயரில் மண் கொள்ளை தொடங்கியது.
இதனை அடுத்து விவசாயிகள் புகாரின் பேரில் சேத்துார் இன்ஸ்பெக்டர் சார்லஸ், வருவாய் துறையினர் சொக்கநாதன் புத்துார் விலக்கு செக்போஸ்டில் செங்கல் சூளைகளுக்கு சென்ற லாரிகளை நிறுத்தி அனுமதி சீட்டு குறித்து விசாரித்தனர். பின்னர் கண்மாயிலிருந்து டிராக்டர்கள் மூலம் மண் கொள்ளை தடையின்றி நடந்து வருகிறது.
தனியாருக்கு செல்லும் அரசின் நிதி முறைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அம்மையப்பன்: விவசாயிகள் பெயரில் அரசியல்வாதிகள், அலுவலர்கள் கண்காணிப்பில் செங்கல் சூளைகளுக்கும், எஸ்டேட் தொழிலுக்கு மண் சப்ளை நடந்து வருகிறது. உண்மையான விவசாயிகளுக்கு இதில் பயன் போய் சேரவில்லை.
புகாரால் லாரிகளில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு டிராக்டர்களில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண் அள்ளப் படுகிறது., என்றார்.