ADDED : ஜூலை 21, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், 5 பயனாளிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் ஊக்கப் பரிசினையும் வழங்கினார். முன்னதாக செம்பட்டியில் ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்தார். ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, டாக்டர் கணேஷ், தாசில்தார் செந்தில்வேல், ஒன்றிய குழு தலைவர் சசிகலா உட்பட கலந்து கொண்டனர்.