காரியாபட்டி, செப். 9--
காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார் மரக்காயர், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர்.
முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். கலெக்டர் ஜெயசீலன், துாத்துக்குடி ஸ்பீக் கிரீன் ஸ்டார் நிறுவன மனித வள மேம்பாட்டு துறை தலைவர் சிவக்குமார் ஜெயராமன் பேசினர்.
டீன் சிவரஞ்சனி, பேராசிரியைகள் பாரிஷா பேகம், தமிழ்ச்செல்விக்கு சிறந்த ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் ஜெயசாந்தி, நர்மதா, பரமேஸ்வரி, பாண்டிமாதேவிக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. 25 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு சிறந்த சாதனையாளர், சமூக சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலாசார துறை இணை இயக்குனர் ஹேமநாதன் கனிவல், மென்பொருள் நிறுவன பொறியாளர் விஜய சரவணன், பேராசிரியர்கள் முரளி, கண்ணன், டீன் மோகனலட்சுமி கலந்து கொண்டனர்.