/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் காட்டுத்தீ
/
ஸ்ரீவி., மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் காட்டுத்தீ
ஸ்ரீவி., மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் காட்டுத்தீ
ஸ்ரீவி., மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடரும் காட்டுத்தீ
ADDED : மே 08, 2024 06:19 AM

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வனச்சரகங்களுக்கு இடைப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டாவது நாளாக நேற்று இரவும் காட்டுத்தீ ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லாததால் செடி, கொடிகள், புற்கள் காய்ந்து சருகாகி கிடக்கிறது. சதுரகிரியிலும் வெப்பம் அதிகரித்து மலை வறண்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் விரியன் கோயில் பீட் என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் காட்டுத்தீ பற்றி எரியத் துவங்கியது. சாட்டிலைட் மூலம் கிடைத்த தகவலில் புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவும் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வனச்சரகங்களுக்கு இடைப்பட்ட அத்தி துண்டு, விரியன் கோயில் பீட் மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிந்தது.
புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் கூறுகையில், மலைப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து சருகாய் கிடக்கும் நிலையில் நேற்று இரவும் அத்தி துண்டு, விரியன் கோயில் பீட் வனப்பகுதியில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை அணைக்க கூடுதல் வனத்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

