/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரி மலை ஏறிய எஸ்.எஸ்.ஐ., மரணம்
/
சதுரகிரி மலை ஏறிய எஸ்.எஸ்.ஐ., மரணம்
ADDED : ஆக 02, 2024 10:05 PM

வத்திராயிருப்பு:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 56. இவர் கோவை மாவட்டம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை 10:00 மணிக்கு தன் மனைவி புவனேஸ்வரி மற்றும் உறவினர்களுடன் சதுரகிரி கோவிலுக்கு மலையேறும் போது சின்ன பசுக்கடை என்ற இடத்தில் மயங்கி விழுந்தார். டோலி துாக்கும் நபர்கள் வாயிலாக தாணிப்பாறை மலை அடிவாரத்திற்கு பாலசுப்பிரமணியத்தை அழைத்து வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.