ADDED : ஜூலை 28, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் (அன்ஸ்கில்டு) சங்கத்தின் 2 வது மாநிலப் பேரவை கூட்டம் மாநிலத் தலைவர் வெங்கிடு தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின்பு ஓய்வூதிய பலன்கள், பணி கொடைக்கு பொருந்தும் வகையில் அரசாணை வெளியிட்டு நடை முறைப்படுத்த வேண்டும் உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநிலத் துணைத் தலைவர் ஹபிப்பத்துல்லா, வரவேற்புக்குழு தலைவர் சிவஞானம், அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி, மாநில பொதுச்செயலாளர் வைரவன், பொருளாளர் பரமேஸ்வரன் உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.