/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் மாநில பேட்மிண்டன் போட்டி
/
சிவகாசியில் மாநில பேட்மிண்டன் போட்டி
ADDED : ஜூலை 20, 2024 12:15 AM
சிவகாசி : சிவகாசியில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி இன்று துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஷட்டில் அசோசியேசன் தலைவர் பார்த்திபன், செயலாளர் ரவிக்குமார்,நிர்வாகிகள் பிரதீப், அருண்குமார், சீனிவாச ராகவன், சதீஷ்பாலமோகன், திருப்பதி சிவராஜ், கூறுகையில், தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேசன் அங்கீகாரத்தோடு மாவட்ட ஷட்டில் அசோசியேசன் சார்பில் இன்று முதல் ஜூலை 24 வரை ஐந்து நாட்கள் மாநில அளவிலான 19 வயதிற்குட்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கான ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் தரவரிசை போட்டி சிவகாசி அன்சோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடக்கிறது.
மதுரை, சென்னை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 350 வீரர்கள் பங்கேற்கின்றனர், என்றனர்.

