/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்டேஷனரி கடையில் தீ: பணம் திருட்டு
/
ஸ்டேஷனரி கடையில் தீ: பணம் திருட்டு
ADDED : மே 30, 2024 03:04 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் அரசபோத்தி 57, இவர் கைகாட்டி கோவில் பஜாரில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை 3:00 மணி அளவில் கடையில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதிய நிலையில், கடையில் இருந்த கல்லாப்பெட்டி எதிர்ப்புறம் உள்ள கழிவுநீர் வாறுகாலில் கிடந்தது. அதிலிருந்து ரூ.6 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
மேலும் அதே பகுதியில் தெரு முனையில் உள்ள ஒரு கடையில் இருந்த சி.சி.டிவி., கேமரா உடைக்கப்பட்டுள்ளது. இதனால் பணத்தை திருடி விட்டு கடைக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.