ADDED : செப் 09, 2024 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10, ப்ளஸ் 2 துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களைக் கல்லுாரி, ஐ.டி.ஐ., கல்வியில் சேர்ப்பதற்கான, கல்விக் கடன் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை (செப். 10) நடத்தப்பட உள்ளது.
2023 - 24 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லுாரியில் சேராத மாணவர்களும் இக்குறை தீர் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லுாரிகள், ஐ.டி.ஐ.,க்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன. இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லுாரி சேர்க்கை வழங்கப்படும்.
உயர்கல்வி பயில நிதி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அறக்கட்டளை, முன்னோடி வங்கி மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும், என்றார்.