/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தானமுறையில் பயணிக்கும் மாணவர்கள்
/
படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தானமுறையில் பயணிக்கும் மாணவர்கள்
படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தானமுறையில் பயணிக்கும் மாணவர்கள்
படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தானமுறையில் பயணிக்கும் மாணவர்கள்
ADDED : மார் 14, 2025 06:28 AM
விருதுநகர்: விருதுநகரில் இருந்து சங்கரலிங்கபுரம் மார்ச். 11ல் சென்ற அரசு பஸ்சில் ஆர்.ஆர்.நகர்., அருகே சென்ற போது மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்தனர்.
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சங்கரலிங்கபுரம் நோக்கி மார்ச் 11 மதியம் புறப்பட்ட அரசு பஸ் ஆர்.ஆர்., நகர் அருகே சென்ற போது அதிக அளவில் பயணிகள் ஏறினர். இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலர் பஸ்சின் படிக்கட்டில் தொங்கிய நிலையில் ஆபத்தான முறையில் பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. தேர்வுகள் முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் பஸ்சில் உயிர் பயத்துடன் சென்றனர்.
இதற்கு முக்கிய காரணம் ஊரகப்பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படாதது. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள், வேலைக்கு சென்று திரும்புபவர்கள் அதிக அளவில் அரசு பஸ்களிலேயே பயணிக்கின்றனர். மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் பெரிய அளவில் இயக்கப்படாமல் பெரும்பாலும் அரசு பஸ்களே இயக்கப்படுகிறது.
இதனால் ஒரு ஊருக்கு செல்லும் பஸ்சில் அந்த வழித்தடத்தில் உள்ள மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் சேர்த்து பயணிப்பதால் எப்போதும் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் கூட்டமாகவே உள்ளது. எனவே மாவட்டத்தில் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.