/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விளாம்பட்டியில் அசுர வேகத்தில் வரும் குவாரி லாரிகளால் மாணவர்கள் அவதி
/
விளாம்பட்டியில் அசுர வேகத்தில் வரும் குவாரி லாரிகளால் மாணவர்கள் அவதி
விளாம்பட்டியில் அசுர வேகத்தில் வரும் குவாரி லாரிகளால் மாணவர்கள் அவதி
விளாம்பட்டியில் அசுர வேகத்தில் வரும் குவாரி லாரிகளால் மாணவர்கள் அவதி
ADDED : ஜூன் 20, 2024 04:12 AM
சிவகாசி: சிவகாசி அருகே விளாம்பட்டியில் அசுர வேகத்தில் வரும் லாரிகளால் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் லாரிகளை மெதுவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாசி எம்.துரைச்சாமிபுரம் அருகே தனியார் குவாரி உள்ளது. இங்கு தினமும் விளாம்பட்டி மாரனேரி வழியாக ஜல்லிகள், கிராவல் எடுப்பதற்காக 100 க்கும் மேற்பட்ட முறை லாரிகள் வந்து செல்கின்றன. விளாம்பட்டியில் ஊருக்குள் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது.
இங்கு ரோட்டின் அருகே இரு பள்ளிகள் உள்ளன. இரு பள்ளிகளிலும் 2000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பகுதியில் காலை 7:00 மணியிலிருந்தே அதிகமான லாரிகள் வருகின்றன. பள்ளி துவங்கும் ,முடியும் நேரத்தில் லாரிகள் மிகவும் வேகமாக வருகின்றன. இதனால் மாணவர்கள் பதற்றத்துடன் செல்ல வேண்டியுள்ளது. ரோடு மிகவும் குறுகியது என்பதால் விலகிச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சைக்கிள், டூ வீலர் காரில் வருகின்றவர்களும் உயிர் பயத்துடனே வர வேண்டி உள்ளது. மாரனேரியில் ரோட்டின் அருகிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு வருகின்ற நோயாளிகளுக்கும் இதே நிலைதான். எனவே வருகின்ற லாரிகளை மெதுவாக செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.