/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமதமாக நடக்கும் பாதாள சாக்கடை பணியால் அவதி
/
தாமதமாக நடக்கும் பாதாள சாக்கடை பணியால் அவதி
ADDED : ஜூன் 16, 2024 04:26 AM

சாத்துார்: சாத்துார் கார்னேசன் துவக்கப்பள்ளித் தெருவில் தாதமாக நடைபெறும் பாதாள சாக்கடை இணைப்பு பணியால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் கார்னேசன் துவக்கப் பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு வீடுகளுக்கு பாதாள சாக்கடை குழாய் இணைக்கும் பணி நடைபெற துவங்கியது. இதற்காக இந்த தெருவில் அமைக்கப்பட்டிருந்த பேவர் ப்ளாக்கல் ரோடு அகற்றப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது.
பள்ளம் தோண்டும் போதே பள்ளி நிர்வாகமும் இப்பகுதி பொதுமக்களும் பள்ளி பகுதி என்பதால் விரைந்து வேலையை முடிக்க கேட்டுக் கொண்டனர்.
ஆனாலும் தாமதமாகவே நடைபெற்று வரும் பணியால்இந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரடு முரடான பாதையில் சிறுவர்கள் நடக்க முடியாமல் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.
இதனால் பள்ளிக்கு வரும் பெற்றோர்களும் இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து மீண்டும் பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.