/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பெயரளவில் நடக்கும் ஒன்றியக்குழு கூட்டங்கள் தேர்தல் வரவுள்ளதால் ஆர்வமின்றி கவுன்சிலர்கள்
/
பெயரளவில் நடக்கும் ஒன்றியக்குழு கூட்டங்கள் தேர்தல் வரவுள்ளதால் ஆர்வமின்றி கவுன்சிலர்கள்
பெயரளவில் நடக்கும் ஒன்றியக்குழு கூட்டங்கள் தேர்தல் வரவுள்ளதால் ஆர்வமின்றி கவுன்சிலர்கள்
பெயரளவில் நடக்கும் ஒன்றியக்குழு கூட்டங்கள் தேர்தல் வரவுள்ளதால் ஆர்வமின்றி கவுன்சிலர்கள்
ADDED : ஜூலை 25, 2024 03:55 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டங்கள் ஆரோக்கியமான விவாதம் எதுவுமின்றி பெயருக்கு கூட்டப்பட்டது போல் நடக்கிறது. இந்தாண்டு இறுதியில் தேர்தல் வரவுள்ளதால் கவுன்சிலர்கள் பலர் ஆர்வமின்றி உள்ளனர்.
மாவட்டத்தில் 11 ஒன்றியங்கள் உள்ளன. இதன் கூட்டங்கள் மாதந்தோறும் ஒன்றிய கவுன்சிலர்களால் நடத்தப்படுகின்றன. ஒன்றியக்குழு தலைவர்கள் தலைமை வகிக்க, துணை தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகிக்க கூட்டம் நடத்தப்படுகிறது.
2019ல் மக்கள் பிரதிநிதிகளாக பதவியேற்ற ஒன்றியகவுன்சிலர்கள் இறுதியாண்டில் உள்ளனர். துவக்கத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டும், விவாதங்கள், வெளிநடப்பு இருந்தன. நாளாக நாளாக கூட்டங்கள் தீர்மானம் நிறைவேற்றவும், பெயருக்கு மாதம் ஒருமுறை நடத்த வேண்டும்என்பதற்காக மட்டும் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது இன்னும் சில மாதங்களிலே தேர்தல் வரவுள்ளதால் கவுன்சிலர்கள் பலர் ஆர்வமின்றி வருகின்றனர். சில கவுன்சிலர்கள் மட்டும் வேண்டிய திட்டங்களை பெற்று தங்கள் வார்டில் நிறைய பணிகள் நடக்க தேவையான முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்த எந்த ஆரோக்கியமான விவாதமும் இல்லை. பெரும்பாலான கவுன்சிலர்கள் ஊரக பின்புலத்தில் இருந்து வருவதால் போதிய கல்வி அறிவு, பயிற்சி இருக்காது.
இதற்காக தான் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்தாக்க பயிற்சி நடத்தப்படுகிறது.
புதிய திட்டங்கள் பற்றியும், அதிகாரிகளோடு மக்கள் பணியாற்றுவது பற்றியும் பயிற்சி அளிக்கிறது. இருப்பினும் பல ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள்எவ்வித அதிகாரமும் இன்றி பெயருக்கு தான் உள்ளனர். இந்நிலையில் ஒன்றியக் குழு கூட்டங்கள் பல ஒன்றியங்களில் சாதாரணமாக துவங்கி அரை மணி நேரத்திற்குள்நடந்து முடிந்து விடுகின்றன.
இதில் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்புவதும், புதிய திட்டங்களை தங்கள்ஊராட்சி பகுதிகளில் கொண்டு வருவது குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லை.
இதனால் அடிப்படை வசதிகளில் தொய்வு ஏற்பட்டு மக்கள் தான் அவதிப்படும் சூழல் உள்ளது. மேலும் இன்னும் பதவி முடிய ஓராண்டே உள்ளதாலும், பெரிய அளவில் கூட்டத்தில் பலரும் கவனம் செலுத்துவதில்லை.
ஆகவே ஒன்றிய கவுன்சிலர்கள் மக்களின் அடிப்படை தேவைகள் அறிந்து அதற்கேற்ற ஆரோக்கியமான விவாதங்களை முன் வைத்து இன்னும் சில மாதங்களே நடந்தாலும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய சிறப்பாக செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.