/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறப்புவிழா நடந்த ஒரு மாதத்தில் பழுதான குடிநீர் பிளான்ட்
/
திறப்புவிழா நடந்த ஒரு மாதத்தில் பழுதான குடிநீர் பிளான்ட்
திறப்புவிழா நடந்த ஒரு மாதத்தில் பழுதான குடிநீர் பிளான்ட்
திறப்புவிழா நடந்த ஒரு மாதத்தில் பழுதான குடிநீர் பிளான்ட்
ADDED : ஜூன் 13, 2024 05:22 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் திறப்பு விழா நடந்த ஒரு மாதத்திலேயே பழுதானதால் மக்கள் குடிநீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பள்ளி மடம் ஊராட்சி. இதற்கு உட்பட்டது காரேந்தல் கிராமம். இங்கு தண்ணீர் தட்டுப்பாடாக இருப்பதால், மக்கள் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி வந்தனர். இந்நிலையில் ஊராட்சி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பிளான்ட் ரூ.8 லட்சம் நிதியில் அமைக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் தங்கம் தென்னரசு பிளான்டை திறந்து வைத்தார். 1 மாதம் வந்த குடிநீர் பிளான்ட் பழுது ஆனதால் மக்களால் குடிநீர் பிடிக்க முடியவில்லை. 2 மாதம் ஆகியும் ஊராட்சி நிர்வாகம் பழுதை சரிசெய்ய அக்கறை காட்டவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை ஒரு குடம் 15 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். லட்சக்கணக்கில் செலவழித்து திறந்த வைத்த பிளான்ட் பழுதாகி காட்சி பொருளாக இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.