ADDED : மார் 25, 2024 06:32 AM

சிவகாசி : சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் குழாய் உடைந்து ரோட்டில் ஓடும் குடிநீரால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
போடும் சேதம் அடைந்து வருவதால் வாகன ஓட்டுகள் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில் இதே ரோட்டில் தொட்டி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் குடிநீர் வீணாக ஓடுகின்றது.
ஒரு வாரத்திற்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் ஓடியதால் ரோடும் சேதமடைந்து வருகிறது. பொதுவாகவே நகர் முழுவதும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
கோடை துவங்குவதற்கு முன்பு வெயில் கொளுத்துவதால் குடிநீரின் தேவை அதிகரிக்கும். இதுபோல் அவ்வப்போது குழாய் உடைந்து குடிநீர் வீணாகி பற்றாக்குறை ஏற்படுவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே குழாய் உடைப்பினை சரி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

