ADDED : ஆக 24, 2024 03:25 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை நீரேற்று நிலையத்திலிருந்து சிவகாசிக்கு வரும் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.
வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது.
இதற்காக வெம்பக்கோட்டையில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சிவகாசிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.
இதற்காக வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி வரை ரோட்டோரத்தில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெம்பக்கோட்டை உத்தண்ட சுவாமி கோயில் அருகே சிவகாசி செல்லும் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகின்றது. சிவகாசி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்ற நிலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே உடனடியாக உடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.