/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அறிவிப்போடு நிற்குது ஏழாயிரம் பண்ணை பைபாஸ் ரோடு அமைக்கும் பிரச்சனை
/
அறிவிப்போடு நிற்குது ஏழாயிரம் பண்ணை பைபாஸ் ரோடு அமைக்கும் பிரச்சனை
அறிவிப்போடு நிற்குது ஏழாயிரம் பண்ணை பைபாஸ் ரோடு அமைக்கும் பிரச்சனை
அறிவிப்போடு நிற்குது ஏழாயிரம் பண்ணை பைபாஸ் ரோடு அமைக்கும் பிரச்சனை
ADDED : செப் 06, 2024 04:30 AM
சாத்துார்,; ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பைபாஸ் ரோடு அமைக்கப்படும் என அரசு அறிவித்தும் இன்று வரை எவ்வித பணிகளும் செயல்படுத்தாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். விரைவில் செயல்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏழாயிரம்பண்ணையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி சுற்றியுள்ள 18 பட்டி கிராமங்களுக்கு தாய்க்கிராமமாக உள்ளது. இங்குள்ள பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். ஏழாயிரம் பண்ணையில் காய்கறி மார்க்கெட் , உரக்கடைகளுக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகளும் மக்களும் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக காலை முதல் இரவு வரை இங்கு உள்ள மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மேலும் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளுக்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் வெளியூரில் இருந்தும் உள்ளூரில் இருந்தும் தொழிலாளர்களும் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்தப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நான்கு சக்கர வாகனங்களாலும் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாத்துாரில் இருந்து ஏழாயிரம்பண்ணை வழியாக சங்கரன்கோவிலுக்கும் தென்காசி, குற்றாலத்திற்கும் பல வாகனங்கள் சென்று வருகின்றன.
இதன் காரணமாகவும் மெயின் ரோட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டு ஏழாயிரம்பண்ணைகடந்து செல்ல முடியாமல்வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவேஇங்கு பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என இந்த பகுதி வியாபாரிகளும் மக்களும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பைபாஸ் ரோடு அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன் அரசு அறிவித்தது .ஆனால் இன்றுவரை எந்த பணியும் துவங்கப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போலீசார்ரும் திணறும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து ஏழாயிரம் பண்ணையில் பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.