/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அகற்றப்பட்ட மணல் ரோட்டிலேயே குவிப்பு
/
அகற்றப்பட்ட மணல் ரோட்டிலேயே குவிப்பு
ADDED : பிப் 22, 2025 06:58 AM

சிவகாசி: சிவகாசி காந்தி ரோட்டில் பரவிக் கிடந்த மணல்களை அகற்றி ரோட்டிலேயே குவித்து வைத்திருப்பதால் வாகன ஓட்டிகள் மீண்டும் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்டிலிருந்து செல்லும் காந்தி ரோடு, விஸ்வநத்தம் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரோடு குறுகிய நிலையில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் குறுகிய ரோட்டில் பாதி அளவிற்கு மணல்கள் பரவி கிடப்பதால் டூவீலரில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் ரோட்டில் பரவி கிடந்த மணல்கள் அகற்றப்பட்டது. ஆனாலும் அகற்றப்பட்ட மணல் ரோட்டிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் மீண்டும் சிரமப்படுகின்றனர்.
டூவிலரில் செல்பவர்கள் தெரியாமல் மணல் குவியல் மீது சென்றால் வழுக்கி விழுகின்றனர். எனவே ரோட்டில் கிடக்கும் மணல் குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.