/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கட்டணமில்லா அரசு பஸ்சை சிறைபிடித்த பெண்கள்
/
கட்டணமில்லா அரசு பஸ்சை சிறைபிடித்த பெண்கள்
ADDED : ஜூலை 26, 2024 12:09 AM
திருச்சுழி : திருச்சுழி அருகே நிறுத்தாமல் சென்ற கட்டணமில்லா அரசு பஸ்சை பெண்கள் சிறை பிடித்தனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வழியாக காரைக்குளத்திற்கு கட்டணமில்லா அரசு பஸ் இயங்கி வருகிறது . நேற்று காலை காரைக்குளம் நோக்கி சென்ற பஸ்ஸை பள்ளிமடம் பஸ் ஸ்டாப் அருகில் பெண்கள் நிறுத்த முயன்ற போது பஸ் நிற்காமல் சென்றது. பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதாலும் வேலைக்கு செல்வதற்குரிய தட்டு, மண்வெட்டி ஆகிய பொருட்களுடன் பஸ்ஸில் ஏற்றி வரக்கூடாது என்றும் டிரைவர், கண்டக்டர் கூறியதாக பெண்கள் புகார் கூறினர்.
இதையடுத்து, காரைக்குளம் சென்று விட்டு மதியம் திரும்பிய பஸ்ஸை ஊரணி பட்டி பஸ் ஸ்டாப் அருகில் அங்கிருந்த பெண்கள் சிறை பிடித்து டிரைவர் கண்டக்டரை எச்சரித்து இனிமேல் அனைத்து பஸ் ஸ்டாப்புகளிலும் நிறுத்திச் செல்ல வேண்டும் என கண்டித்து அனுப்பினர்.