/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதுக்குளம் கண்மாய் செல்லும் மேம்பால பணிகள் துவக்கம்
/
புதுக்குளம் கண்மாய் செல்லும் மேம்பால பணிகள் துவக்கம்
புதுக்குளம் கண்மாய் செல்லும் மேம்பால பணிகள் துவக்கம்
புதுக்குளம் கண்மாய் செல்லும் மேம்பால பணிகள் துவக்கம்
ADDED : செப் 01, 2024 05:01 AM

ராஜபாளையம், : ராஜபாளையம் புதுக்குளம் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஓடையை கடக்கும் மேம்பால பணிகள் துவங்கி உள்ளன. இது விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி புதுக்குளம் கண்மாய். அய்யனார் கோயில் ஆற்றில் இருந்து நீர்வரத்து பெரும் முதல் கண்மாயாக இருப்பதால் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் தேங்கி இருக்கும். மழைக்காலங்களில் இதன் உபரி நீர் இங்குள்ள அகலமான ஓடையில் புளியங்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு சென்று கொண்டிருக்கும்.
300 ஏக்கருக்கும் அதிகமாக நெல் வாழை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஓடையை கடந்து விவசாய இடுப்பொருட்கள், விலை பொருட்களும் கொண்டு செல்ல வேண்டி இருந்தது.
நீர்வரத்து காலங்களில் இப்பணிகளில் தாமதத்தால் பெரும் சிக்கல் ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. இதையடுத்து ரூ. 1.30 கோடியில்மேம்பாலத்திற்கான பணிகள் துவங்கியுள்ளது. இதை மழைக்காலத்திற்கு முன் பணிகளை முடிக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.