நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி வீரசோழனை சேர்ந்த முருகன்.
சலூன் கடை நடத்தி வரும் இவர், நேற்று முன் தினம் காலை கடை திறக்க சென்றார். இவரது மனைவி ஆடு மேய்க்க சென்றார். வீட்டை பூட்டி சாவியை அங்குள்ள ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்றார். மதியம் வீடு வந்து பார்த்தபோது, பீரோ திறந்திருந்தது. உள்ளே வைத்திருந்த 2 பவுன் தங்க செயின், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 75 ஆயிரம். வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.

