/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் பாண்டியன், சத்யா நகர்களில் நடமாடும் நாய்கள்
/
திருத்தங்கல் பாண்டியன், சத்யா நகர்களில் நடமாடும் நாய்கள்
திருத்தங்கல் பாண்டியன், சத்யா நகர்களில் நடமாடும் நாய்கள்
திருத்தங்கல் பாண்டியன், சத்யா நகர்களில் நடமாடும் நாய்கள்
ADDED : மே 26, 2024 03:38 AM

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன் , சத்யா நகர்களில் நடமாடும் தெரு நாய்களால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசியில் உள்ள தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தங்கல் பாண்டியன் நகர், சத்யா நகரில் மெயின் ரோட்டில், குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் ரோட்டில் போவோர் வருவோரையும், தெருவில் விளையாடும் சிறுவர்கள், பள்ளி மாணவர்களையும் விரட்டி கடிக்கிறது.
டூவீலரில் செல்பவர்களை விரட்டி விபத்தில் சிக்குகின்றனர். இதேபோல் சிவகாசி மாநகராட்சி முழுவதும் கோயில், பள்ளிகள் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றது.
சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை மையம் முறையாக செயல்படாததால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாநகராட்சியில் சுற்றித் திரியும் 480 தெருநாய்கள் அடையாளம் காணப்பட்டு, தனியார் அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ரூ.3.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கப்படாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் ரோட்டில் சுற்றி திரியும் தெரு நாய்களால் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. எனவே மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை சீரமைக்க ரூ.3.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கையை துவக்கவில்லை. எனவே தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை சீரமைத்து நாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.