/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் ஊழியருக்கு மிரட்டல்: காங். நிர்வாகி கைது
/
ரேஷன் ஊழியருக்கு மிரட்டல்: காங். நிர்வாகி கைது
ADDED : ஆக 26, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் தட்டாங்குளத்துபட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபவர் நாகராஜன் 50. இவர் நேற்று முன்தினம் கடையில் பணியில் இருந்தபோது அங்கு வந்த திருவண்ணாமலை ஊராட்சி முன்னாள் தலைவரும், காங். கட்சி வட்டார தலைவருமான முருகராஜ் 54, என்பவர் தகராறு செய்து அவதுாறாக பேசி வேலை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார், முருகராஜை கைது செய்தனர்.

