/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புகையிலை பொருட்கள் கடத்திய மூவர் கைது
/
புகையிலை பொருட்கள் கடத்திய மூவர் கைது
ADDED : ஏப் 18, 2024 04:54 AM
சாத்துார்: சாத்துார் --- கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் தோட்டிலோவன்பட்டி விலக்கில் போலீசார் வாகன சோதனை செய்தபோது கேரளாவிற்கு வேன், காரில் கடத்தப்பட்ட புகையிலை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவை சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்துார் தாலுகா எஸ்.ஐ., ஆபிரகாம் தலைமையிலான போலீசார் தோட்டிலோவன்பட்டி விலக்கருகே நேற்றிரவு 9:30 மணிக்கு வாகன சோதனை செய்தனர். பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற வேன், கார் நிற்காமல் சென்றன.
போலீசார் விரட்டி பிடித்து சோதனை செய்தபோது லோடு வேன் மற்றும் காரில் 1300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா இருப்பது தெரியவந்தது .போலீசார் இவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த கேரளாவை சேர்ந்த ஹபிப், 30, சபில், 38, லோடுவேன் டிரைவர் சாத்துார் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த குமாரவேல் 39, ஆகிய மூவரை கைது செய்தனர். மேல் விசாரணை நடக்கிறது.

