/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
/
சாத்துார் ரோட்டில் போக்குவரத்து நெரிசல்
ADDED : செப் 17, 2024 04:40 AM

சாத்துார் : சாத்துார் மெயின் ரோட்டில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
சாத்துார் மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தனியார் மருத்துவமனை, தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், ஓட்டல்கள், தனியார் நிறுவனங்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதனால் காலை முதல் மாலை வரை மாணவர்களும் மக்களும் சாலையை பயன்படுத்தி வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
மேலும் மெயின் ரோடு சந்திக்கும் பகுதியில் அடிக்கடி கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாகவும் மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் அவசரமாக வெளியூர் செல்லும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. டிராபிக் போலீசாரும் நெரிசலை சரி செய்ய முடியாமல் திணறும் நிலை உள்ளது.
மெயின் ரோட்டில் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் முக்குராந்தல் பகுதியில் கட்சியினர் கூடுவதை தவிர்க்கவும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு வேறு இடத்தை ஒதுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.