ADDED : ஏப் 08, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், பயிற்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, தாசில்தார்கள் செந்தில்வேல், அறிவழகன், பொன்ராஜ், வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

