/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயர் மின்னழுத்தத்தால் பழுதாகும் டிரான்ஸ்பார்மர்கள் மின்தடையால் மக்கள் கடும் அவதி
/
உயர் மின்னழுத்தத்தால் பழுதாகும் டிரான்ஸ்பார்மர்கள் மின்தடையால் மக்கள் கடும் அவதி
உயர் மின்னழுத்தத்தால் பழுதாகும் டிரான்ஸ்பார்மர்கள் மின்தடையால் மக்கள் கடும் அவதி
உயர் மின்னழுத்தத்தால் பழுதாகும் டிரான்ஸ்பார்மர்கள் மின்தடையால் மக்கள் கடும் அவதி
ADDED : மே 04, 2024 04:41 AM
விருதுநகர்: மாவட்டத்தில் உயர் மின்னழுத்தத்தால் டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி மின்தடை ஏற்படுவதால் வெக்கை தாங்காமல் பகல், இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
மாவட்டத்தில் கிராம, நகர, பெருநகர, வணிக பயன்பாட்டிற்காக தொடர் மின் வினியோகத்தை உறுதி செய்ய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு மின்வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் பெருகி வருவதாலும், முன்பு இருந்ததை விட புறநகர் பகுதிகள் அதிகரித்து விட்டதாலும் முன்பு வைத்த பழைய டிரான்ஸ்பார்மர்கள் போதுமானதாக இல்லை.
டிரான்ஸ்பார்மர்களில் கொள்திறனுக்கு ஏற்ப பயன்பாடு இருக்க வேண்டும். அதை தாண்டி சென்று விட்டால் அவை உடனடியாக பழுதடைந்து விடுகின்றன.
உதாரணமாக புறநகர் பகுதியில் 63 கே.வி.,யில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டிருந்தால், வீடுகளின் பெருக்கம், அதீத பயன்பாடு காரணமாக அவற்றை முதன்மை, இரண்டாம் நிலை காயில்கள் பழுதடைந்து டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்து விடுகின்றன.
இவ்வாறு செயல் இழந்து விட்ட டிரான்ஸ்பார்மர்களை மாற்றி விட்டு புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க நீண்ட நேரம் எடுக்கிறது. குறிப்பாக இரவில் டிரான்ஸ்பார்மர் செயல் இழந்து மின்தடை ஏற்பட்டு விட்டால் அடுத்த நாள் காலை தான் பணியையே துவங்கும் நிலை உள்ளது.
மக்கள் புகார் அளித்தாலும், அதற்கான உபகரணங்கள் துணை மின் நிலையங்களில் இருந்து வர வேண்டி உள்ளதால் தாமதம் ஏற்படுகிறது.
உதாரணமாக நேற்று முன்தினம் தினமலர் நகர், வேலுச்சாமி நகர் பகுதிகளில் இரவு 11:00 மணிக்கு டிரான்ஸ்பார்மர் செயல் இழந்து மின்தடை ஏற்பட்டது. அதை சரி செய்யமல்லாங்கிணர் துணை மின் நிலையத்தில் இருந்து புதிய டிரான்ஸ்பார்மருக்கான உபகரணங்கள் கொண்டு வரப்பட்டன.
இதனால் 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நீடித்தது. தற்போது வெப்ப அலை வீசி வருவதால் பகல், இரவு என இரு நேரங்களிலும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
16 கே.வி., 25 கே.வி., 63 கே.வி., 100 கே.வி., 250 கே.வி., 500 கே.வி. என்ற நிலைகளில் ஊரக, நகர், வணிக பகுதிகளுக்கு தகுந்த வகையில் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படுகின்றன.
தற்போது கோடை என்பதால் நகர்ப்பகுதிகளில் ஏ.சி., மின் விசிறி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் பயன்பாடும் பெருகி உள்ளது.
இதனால் டிரான்ஸ்பார்மர்கள் பல அதற்குரிய கொள்திறனை தாண்டி செயல்படுவதால் செயலிழக்கும் அபாயத்தை சந்தித்துள்ளன. இதே நிலை நீடித்தால் மாவட்டத்தில் பல பகுதிகளில் இந்த சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாவட்ட மின் வாரியம் இது போன்ற சிக்கலுக்கு முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
உயர் மின்னழுத்த பிரச்னை உள்ள பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்து தேவைக்கேற்ப கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.