/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலில் காயும் மரங்கள்
/
ஸ்ரீவி., மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலில் காயும் மரங்கள்
ஸ்ரீவி., மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலில் காயும் மரங்கள்
ஸ்ரீவி., மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலில் காயும் மரங்கள்
ADDED : மார் 08, 2025 03:30 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் தீ தடுப்பு கோடுகளை சீரமைக்கும் பணிகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, மதுரை மாவட்டத்தில் சாப்டூர் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து செடி, கொடிகள், மரங்கள் காய்ந்தும், இலைகள் உதிர்ந்து சருகாகி வருகிறது.
இந்த வனப்பகுதியில் யானைகள், மான்கள், சாம்பல் நிற அணில்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ள நிலையில் வெயிலால் காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்க 4 வனச்சரகங்களிலும் உள்ள 40 பீட்களில் தீத்தடுப்பு கோடுகளை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மலைப்பகுதியில் தீ தடுப்பு கோடுகளை வனத்துறையினர் சீரமைப்பது வழக்கம். இதன்படி தற்போதும் சில இடங்களில் 3 மீட்டர் அகலத்திலும், சில இடங்களில் 6 மீட்டர் அகலத்திலும் தீ தடுப்பு கோடுகள் சீரமைக்கப்படுகிறது.