/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் கலங்கலாக வரும் குடிநீர்
/
சாத்துாரில் கலங்கலாக வரும் குடிநீர்
ADDED : ஜூலை 04, 2024 12:53 AM
சாத்துார்: சாத்துார் நகராட்சியில்குழாய்கள் மூலம் விநியோகமாகும் குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துார் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கும் குழாய் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் ஆகிறது. இவ்வாறு விநியோகமாகும் குடிநீர் கலங்கலாகவும் நுரைத்தும் வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பெரியார் நகர் குருலிங்காபுரம் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் வினியோகம் ஆகும் குடிநீர் கலங்கலாக மஞ்சள் கலரில் வருகிறது.
இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தபோது குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சிறிது கலங்கலாக வரும் பின்னர் சரியாகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இருந்த போதும் தினந்தோறும் காலையில் முதலில் வரும் குடிநீர் மிகவும் கலங்கலாக இருப்பதால் பொதுமக்களால் பாத்திரத்தில் பிடித்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தாமிரபரணி திட்டத்தின்கீழ் குடிநீர் நகராட்சிக்கு வந்து மேல்நிலைத் தொட்டிகளில் நிரப்பப்பட்டு பின்னர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தண்ணீர் கலங்கலாக வருவதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் புலம்பும் நிலை உள்ளது.
குடிநீர் பகிர்மான குழாயில் உடைப்பு ஏற்பட்டவுடன் சரி செய்து இருந்தால் இது போன்று மண் கலந்து கலங்கலாக வருவதற்கு வாய்ப்பு இல்லை.
நகராட்சிக்கு வருகின்ற தண்ணீர் கலங்கலாக வருகிறதா அல்லது மேல் நிலைத் தொட்டியில் இருந்து நகராட்சியால் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் கலங்களாக வருகிறதா என்பது தெரியவில்லை. எனினும் சுத்தமான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என மக்கள் நகராட்சியை வலியுறுத்தி உள்ளனர்.