/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது
/
பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது
ADDED : செப் 01, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் ; விருதுநகர் அருகே கவுண்டம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி 40. இவர் நாட்டார் மங்கலம் ரோட்டில் அனுமதியின்றி தகர செட் அமைத்து பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மிஷின் திரிகள் 10 கட்டு பதுக்கி வைத்திருந்தார்.
ஆமத்துார் பிள்ளையார் கோயிலைச் சேர்ந்தவர் கூடலிங்கம் 29. இவர் நாட்டார்மங்கலம் ரோட்டில் திருமண மண்டபம் அருகே அனுமதியின்றி தகர செட் அமைத்து பட்டாசு மிஷின் திரிகள் 8 கட்டு பதுக்கி வைத்திருந்தார். இருவரையும் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.