/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த இருவர் கைது
/
பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த இருவர் கைது
பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த இருவர் கைது
பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த இருவர் கைது
ADDED : ஏப் 18, 2024 05:02 AM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் பூட்டிய வீட்டில் 48 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளையடித்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கணேசன் 38, முத்துசாமி 32 , ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜபாளையம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். மனைவி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 48 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்ளிட்டோர் அடங்கிய குற்றப்பிரிவு தனிப்படை குழுவினர் விசாரித்து வந்தனர்., அப் பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, வெம்பக்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணேசன் 38, திருச்சி அருகே துவரங்குறிச்சி சேர்ந்த முத்துச்சாமி 32, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

