ADDED : மார் 01, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : தென்காசியை சேர்ந்தவர் சுதாகர்,50.இவரின் ஆம்னி வேனில் உறவினர்கள் சங்கர், 45. பாலகுமாரி, 29. சவுந்தரவல்லி, 40. சக்தி கவின்குமார் 18. மோனிஷ் குமார், 16.ஆகியோர் நேற்று காலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு மதியம் 1:30 மணிக்கு ஊர் திரும்பினர்.
இருக்கன்குடி அரசு ஆட்டுப்பண்ணை அருகே வேன் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
வேனை ஓட்டி வந்த சுதாகர்,சக்திகவின்குமார் படுகாயம் அடைந்தனர்.மற்றவர்கள் லேசான காயமடைந்தனர்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.