/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்
ADDED : மார் 05, 2025 05:56 AM
விருதுநகர்: வேளாண் இணை இயக்குனர் விஜயா செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதார், அலைபேசி எண்கள், நில உடைமை விவரங்களையும் இணைக்கும் பணி வருவாய் கிராமங்களில் நடக்கிறது.
விவசாயிகள் இவற்றிலோ அல்லது பொது சேவை மையம் சென்று நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண் துறை அலுவலர்களால் நடத்தப்படும் முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று மார்ச் 31க்குள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும், என்றார்.