/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வந்தே பாரத் ரயிலுக்கு விருதுநகரில் நிறுத்தம் தேவை காலண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ADDED : ஜூலை 07, 2024 01:44 AM
சிவகாசி: சென்னை - -நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு விருதுநகரில் நிறுத்தம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க செயலாளர் ஜெயசங்கர் கூறுகையில்,
சென்னை - நாகர்கோவில் இடையே ஜூலை 11 முதல் இயக்கப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயிலுக்கு விருதுநகரில் நிறுத்தம் வழங்காதது வர்த்தகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற சிறந்த தொழில்நகரங்களை உள்ளடக்கியது. தினசரி ஆயிரக்கணக்கோர் தொழில் நிமித்தமாக ரயிலில் சென்னை சென்று வருகின்றனர்.
சிறப்பு ரயில் என்பது அனைத்து பகுதி மக்களுக்கும் சிறப்பான சேவையை தர வேண்டுமே தவிர சிரமத்தை தரக்கூடாது. விருதுநகரில் நிறுத்தம் இல்லாததால் தெற்கு ரயில்வேயின் இச்செயல் தமிழகத்தின் முக்கிய தொழில் மாவட்டத்தை வஞ்சிப்பது போல் உள்ளது.
விருதுநகர் நிறுத்தத்துடன் சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும், என்றார்.