/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளி வளாகம் முன் காய்கறி கடைகள்
/
பள்ளி வளாகம் முன் காய்கறி கடைகள்
ADDED : மார் 05, 2025 06:08 AM
காரியாபட்டி: காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன் காய்கறி கடைகளை விரித்து வைத்து வியாபாரம் செய்வதால் இடையூறு ஏற்பட்டு, மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர் . போதிய இட வசதி கிடையாது. சைக்கிள்களை நி றுத்த வேண்டும் என்றாலோ ரோட்டோரத்தில் தான் நிறுத்த வேண்டும்.
இதனால் எப்போதும் அப்பகுதியில் நெருக்கடியாக இருக்கும். நெருக்கடியான பள்ளி வளாகம் முன் ஏராளமான நடைபாதை வியாபாரிகள் காய்கறி கடைகளை விரித்து வைத்து வியாபாரம் செய்கின்றனர். காய்கறிகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கூட்டமாக நிற்பதால் போக்குவரத்து நெருக்கடி, மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
தற்போது முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்ய வருகின்றனர். வாகனங்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்ல முடியாது. ரோட்டோரத்தில் தான் நிறுத்த வேண்டும். கடைகளால் நிறுத்த முடியாமல் போகிறது.
பள்ளி முடிந்து மாணவிகள் கூட்டமாக வெளியில் வரும் போது. காய்கறி கடைகளால் சிரமப்பட்டு வருகின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாற்று இடத்தில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.